MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை ஒரு முன்னணி ஹீரோயின்.. யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை ஒரு முன்னணி ஹீரோயின்.. யார் தெரியுமா?

அம்மா கையில், மிகவும் கியூட்டாக இருக்கும் இந்த ஹீரோயின் யார் என்பதை கணித்து விட்டீர்களா? சரி யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

2 Min read
manimegalai a
Published : Dec 20 2023, 10:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

2000ம் ஆண்டு தமிழில் வெளியான, 'காதல் ரோஜாவே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பூஜா குமார் தான் இந்த கியூட் குழந்தை. தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் பூஜா குமார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'இளவேனில் இது வைகாசி மாதம்' பாடல் பலரது ஃபேவரட் பாடல்களில் ஒன்று.
 

26

பூஜா குமார் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் ஆவர். 1995 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை பெற்ற பின்னர், மாடலிங் செய்து கொண்ட நடிப்பின் மீது கவனம் செலுத்தினார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் சில படங்களில் மட்டுமே நடித்தார். 

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே... திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகில் கயல் ஆனந்தி! போட்டோஸ்.!

36

2003 ஆம் ஆண்டு மேஜிக் மேஜிக் 3டி படத்தில் நடித்தார். பின்னர் ஆங்கில மொழி படங்களில் அதிகம் நடித்தாலும், தமிழ் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர், உலக நாயகன் கமல் ஹாசனின்  'விஸ்வரூபம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். 

46

அதன் பின்னர் 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம் 2' என அடுத்தடுத்து கமலுடன் ஜோடி போட்டார். கமல்ஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக சில கிசுகிசுவும் எழுந்த நிலையில்... ஒரேயடியாக திரையுலகை விட்டு விலகி, தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். தற்போது இவருக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.

Jyothika: வாலி படத்தில் சிம்ரன் ஹீரோயினானது எப்படி? 24 வருடம் பொத்தி வச்ச ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா!

56

அவ்வப்போது தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து, புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

66

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட, சிறிய வயது புகைப்படம் ஒன்றை பூஜா குமார் வெளியிட... பலரும் பூஜா சிறு வயதில் செம்ம கியூட்டாக உள்ளதாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved