- Home
- Gallery
- அசாத்திய நடிப்பால் மிரள வைக்கும் நடிப்பு அசுரன்.. விக்ரம் உயிரை கொடுத்த நடித்த படங்கள் இதோ..
அசாத்திய நடிப்பால் மிரள வைக்கும் நடிப்பு அசுரன்.. விக்ரம் உயிரை கொடுத்த நடித்த படங்கள் இதோ..
சிவாஜி, கமலுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லும் நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். தனது படங்களில் விக்ரம் நடித்த மிகவும் சவாலான கதாப்பத்திரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Actor Chiyaan Vikram
படத்திற்கு உடலமைப்பு, தோற்றத்தையே மாற்றி உடலை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் சிவாஜி, கமலுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லும் நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். தனது படங்களில் விக்ரம் நடித்த மிகவும் சவாலான கதாப்பத்திரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
sethu movie
சேது :
1990-ம் ஆண்டே நடிகர் விக்ரம் திரையுலகில் அறிமுகமான விக்ரம் பல படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை. 8 ஆண்டுகள் வெற்றிகாக போராடிய விக்ரமுக்கு கிடைத்த படம் தான் பாலாவின் சேது. சேது படத்தில் முதல் பாதியில் ரக்கட் பாயாவும், இரண்டாவது பாதியில் மொட்டைத் தலை உடன், மெலித்த தேகத்துடன் இருக்கும் மனநோயாளியாகவும் மிரட்டி இருப்பார் விக்ரம்.
pithamagan
பிதாமகன் :
பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் பிதாமகன். சுடுகாட்டில் பிறந்து வளர்ந்த சித்தனாகவே வாழ்ந்து மிரள வைத்திருப்பார் விக்ரம். இறுக்கம், உறுதி, நட்பு, கோபம் கலந்த சித்தனாக விக்ரம் நடித்த காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. பிதாமகன் படத்தில் சித்தன் கதாப்பாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது விக்ரமுக்கு கிடைத்தது.
Anniyan movie
அந்நியன் :
ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என 3 கேரக்டரில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அம்பியாக மிகவும் சாதுவான அப்பாவியாகவும், ரெமோவாக காதல் நாயகனாகவும், அந்நியனகாக அதிரடி ஹீரோவாகவும் அசத்தி இருப்பார் நடிப்பு அசுரன் விக்ரம்.
Deiva thirumagal Movie
தெய்வ திருமகள் :
ஏ.எல் இயக்கத்தில் வெளியான தெய்வ திருமகள் படம் விக்ரமின் நடிப்பு திறமைக்கு தீனி போட்ட படம். குழந்தைத்தனமும், வெகுளித்தனமும் கொண்ட குழந்தையின் குணங்கள் கொண்ட கிருஷ்ணாவாக விக்ரம் தனது நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
I movie
ஐ :
இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் விக்ரம் இணைந்த படம் தான் ஐ. முதல் பாதில் அழகான கட்டுடலுடன் பாடி பில்டராக வலம் வரும் விக்ரம், 2-ம் பாதியில் கூன் விழுந்த கிழவன் போன்ற தோற்றத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றார் விக்ரம்
Thangalaan
தங்கலான்:
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இந்த படத்தில் புரட்சிகர பழங்குடியின தலைவராக விக்ரம் நடிக்கிறார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார் விக்ரம். இந்த படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படம் ஆக்ஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.