தளபதி கட்சி துவங்கும் முன்பே குளறுபடி..! பூத் கமிட்டி விவகாரத்தில்... பொங்கி எழுந்து எச்சரித்த விஜய்!
தளபதி விஜய், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் நடந்த குளறுபடிக்காக, தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமாரை எச்சரித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் சமீப காலமாகவே, நடிப்பை தாண்டி அரசியல் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு வருடமாக அரசியலுக்கு அச்சாரம் போடும் விதத்தில் பல செயல்களை தளபதி மேற்கொண்டு வருகிறார். அதில் முக்கியமானது என்றால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசு தொகை கொடுத்து பாராட்டியது.
தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்... தமிழ்நாட்டில் உள்ள, 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தளபதி பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் விசாரித்து, ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதில் தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமார், பூத் கமிட்டி தகவல் வெளியிடுவதில் குளறுபடி செய்தது தெரியவர, நடிகர் விஜய் அவரை கடுமையாக எச்சரித்தது மட்டும் இன்றி, இனி இப்படி நடக்கவே கூடாது என அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். அதே நேரம் பூத் கமிட்டி விவகாரத்தில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தளபதி விஜயின் இந்த திடீர் நடவடிக்கை, அவரின் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் சில இடங்களில் போட்டியிட்டு, மக்களின் ஆதரவை பொறுத்து 2026 ஆம் ஆண்டு முழுமையாக விஜய் அரசியலில் இறங்குவது குறித்து முடிவு செய்வார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.