- Home
- Gallery
- GOAT : அப்படி போடு சபாஷ்.. தளபதி விஜயின் GOAT பட Satellite Rights - நடந்த வலு போட்டி.. வென்றது யார் தெரியுமா?
GOAT : அப்படி போடு சபாஷ்.. தளபதி விஜயின் GOAT பட Satellite Rights - நடந்த வலு போட்டி.. வென்றது யார் தெரியுமா?
Thalapathy Vijay : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம், மிகப்பெரிய தொகைக்கு பிரபல நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.

TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், 2026ம் ஆண்டு தேர்தலுக்கான அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர், தளபதியின் விஜய் அவர்கள் தற்பொழுது தனது 68வது பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தளபதி விஜயை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
Venkat Prabhu
இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர், நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், வெங்கட் பிரபு படத்தில் நடிக்கும் அவருடைய ஆஸ்தான நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். இதில் புது மாப்பிள்ளை பிரேம்ஜி அவர்களும் அடக்கம்.
Thalapathy 68
பல வெளிநாடுகளிலும், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு தனது 69வது பட பணிகளை முடிக்காமலேயே நேரடியாக அரசியல் களத்தில் தளபதி விஜய் விரைவில் குதிக்க உள்ளார் என்கின்ற தகவல்களும் அடிக்கடி வெளியாகி வருகிறது.
Satellite Rights
இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவலின்படி, மிகப் பெரிய தொகைக்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமத்தை பிரபல "ஜீ தமிழ்" நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.