என்ன நண்பா ரெடியா? அடுத்த அப்டேட் கொடுக்க தயாரான வெங்கட் பிரபு - என்ன அது?
GOAT Update : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

Leo
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான "லியோ" திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதனைத் தொடர்ந்து தனது 68வது திரைப்பட பணிகளை தொடங்கினார் தளபதி விஜய்.
TVK
ஆனால் அவருடைய ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, இந்த ஆண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமா, தனது சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு, முழுநேர அரசியல் தலைவராக பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார் தளபதி விஜய். ஆகவே அவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள இரு படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
vinoth
பிரபல இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் தளபதி விஜய், தற்பொழுது மிகவும் பிஸியாக தனது 68வது பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அந்த திரைப்படத்திலிருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
GOAT 3rd Single
இந்நிலையில் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள தகவலின்படி மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இணையத்தில் கசிந்த சில தகவல்களின்படி, இந்த பாடலை தளபதி விஜயோடு இணைந்து ஸ்ருதிஹாசன் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.
பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன! வயநாடு மற்றும் வால்பாறை நிலச்சரிவு குறித்து கமல் ஆதங்கம்!