அய்யயோ முடியாது.. முடியாது.. அந்த டாப் நடிகரை மட்டும் வச்சு படமே எடுக்கமாட்டேன் - ஷாக் கொடுத்த விஜயின் வாரிசு!
தமிழ் சினிமா ரசிகர்கள் என்பதைத் தாண்டி தற்போது இந்திய சினிமா ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு வரும் ஒரு நடிகர் தான் தளபதி விஜய் அவர்கள். தற்பொழுது அவருடைய மகனான ஜேசன் சஞ்சயும் திரைத்துறையில் களமிறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.
Thalapathy Vijay
கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் "வெற்றி" என்ற திரைப்படத்தில் விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அதன் மூலம் தனது திரையுலகப்பிரவேசத்தை அடைந்தார் தளபதி விஜய். சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் ஒரு உச்ச நட்சத்திரமாக அவர் உருவெடுத்துள்ளார்.
ரஜினி போட்ட ஆர்டர்? 100 குழந்தைகள் ஆபரேஷனுக்கு 1கோடி வழங்கிய கலாநிதிமாறன் மனைவி! குவியும் வாழ்த்து!
Director Jason Sanjay
இந்நிலையில் அவருடைய மகன் ஜெய்சன் சஞ்சய் அவர்களும் அப்பாவைப் போல ஒரு நடிகராக திரையுலகில் களமிறங்குவார் என்று எதிர்பார்த்து நிலையில், அவர் தனது தாத்தாவைப் போல இயக்குனராக களமிறங்கியுள்ளார். சினிமா சம்பந்தமான படிப்புகளை அவர் லண்டன் மற்றும் அமெரிக்காவில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவை.
Lyca Productions
தமிழ் திரை உலகில் தற்பொழுது மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்துவரும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளது சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் இது மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இயக்கும் முதல் திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
vijay and jason vijay
இந்த சூழலில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மற்றும் பிரபலமான நடிகர்களை வைத்து படம் எடுக்க எனக்கு பெரிய ஆசை இருக்கிறது. ஆனால் என் அப்பா விஜய் அவர்களை வைத்து நிச்சயம் படம் எடுக்க மாட்டேன் என்று உறுதிப்பட கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதை அவருடைய தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளாராம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ஒருவரின் மகனாக இருந்து கொண்டு, தன் தந்தையை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளது தளபதியின் ரசிகர்களுக்கு ஷாக் தரும் செய்தியாக வெளியாகி உள்ளது.
ரைட்டு விடு... ஒரே வார்த்தையில் ஓவராய் பேசிய குணசேகரனை அடக்கிய அப்பத்தா! எதிர்நீச்சல் அப்டேட்!