நடிகர் விஜய்யின் லியோ பட டிரைலர் ரிலீசுக்கு வந்த புது சிக்கல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
vijay
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான முன்பதி வெளிநாடுகளில கடந்த மாதமே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழ்நாட்டிலும் இப்படத்தின் முன்பதிவு தொடங்க உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
vijay, lokesh kanagaraj
லியோ படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க, அப்படம் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசியில் போலியாக டிக்கெட்டுகள் அடித்து விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இசை வெளியீட்டு விழாவை கடைசி நேரத்தில் ரத்து செய்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vijay, sanjay dutt
இதற்கு அடுத்தபடியாக அப்டேட்டுக்காக ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலாக பேட் ஆஸ் பாடலை வெளியிட்டது படக்குழு. இதையடுத்து லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ந் தேதி என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக விஜய் பட டிரைலர் வெளியானால் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக திரையரங்குகள் அதனை ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்வது வழக்கம்.
leo trailer release
அந்த வகையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் உள்ள கார் பார்க்கிங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் திரையிடுவர். அப்படி திரையிடுவதற்கு காவல் நிலையத்திலும் அனுமதி வாங்கி திரையிடுவர். ஆனால் தற்போது லியோ பட டிரைலர் ரோகினி தியேட்டரில் திரையிட படக்குழு சார்பில் அனுமதி கோரிய போது காவல் ஆணையரை அனுகுமாறு படக்குழுவுக்கு கோயம்பேடு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. லியோ ஆடியோ லாஞ்சை கேன்சல் செய்தது போல் இதையும் ரத்து செய்துவிடுவார்களா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... “வெளிய போடா”னு துரத்திவிட்ட தயாரிப்பாளர்... சும்மா விடுவாரா நம்ம சூப்பர்ஸ்டார்! ரஜினி செய்த தரமான சம்பவம்