ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனா என்ன... அதைவிட பிரம்மாண்டமா லியோ டீம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி பற்றிய ஹாட் அப்டேட்
லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆன நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.
leo
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படம் குறித்த அப்டேட்டுகளும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று லியோ படத்தின் மாஸான டிரைலரை படக்குழு வெளியிட்டது. ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இந்த டிரைலர் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
thalapathy vijay lokesh kanagaraj
விஜய் படங்கள் என்றாலே அதற்கு பூஸ்ட்டாக அமைவது அப்படத்தின் இசை வெளியீட்டு விழா தான். அந்த வகையில் லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் போலியாக அச்சடித்து விற்பக்கப்பட்டது தெரிந்ததும் உஷாரான படக்குழு, ரசிகர்களின் நலன் கருதி இந்த ஆடியோ லாஞ்சை கேன்சல் செய்வதாக அறிவித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Leo Pre Release Event
ஆடியோ லாஞ்சுக்கு அடுத்தபடியாக டிரைலர் வெளியீட்டுக்கும் பெரிதாக விழா எதுவும் நடத்தப்படாததால், லியோ படம் எந்தவித புரமோஷனும் இன்றி வெளியாகப்போகிறதா என்கிற குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மிகப்பெரிய சம்பவத்தை சர்ப்ரைஸாக செய்து வருகிறதாம் லியோ படக்குழு. அதுதான் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.
vijay
லியோ படத்திற்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாம். அதுவும் இந்தியாவில் இல்லை, துபாயில் நடத்தப்பட உள்ளதாம். அந்நிகழ்ச்சியில் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தளபதி 68 பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய் பிசியாக இருப்பதால் அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற அக்டோபர் 12-ந் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவர்... இப்படி கெட்டவார்த்தை பேசலாமா? லியோ டிரைலரால் சர்ச்சையில் சிக்கிய விஜய்!