MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தொடர் விடுமுறை... பேமிலி ஆடியன்ஸின் தாறுமாறான ரெஸ்பான்ஸால் வசூல் வேட்டை நடத்திய லியோ! 4 நாளில் இத்தனை கோடியா?

தொடர் விடுமுறை... பேமிலி ஆடியன்ஸின் தாறுமாறான ரெஸ்பான்ஸால் வசூல் வேட்டை நடத்திய லியோ! 4 நாளில் இத்தனை கோடியா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 23 2023, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
LEO

LEO

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், தினேஷ் மாஸ்டர், சாண்டி மாஸ்டர், மடோனா செபாஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்த இப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

24
LEO movie team

LEO movie team

வெளியான முதல் நாளே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே ரூ.148 கோடி வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது. இதையடுத்து இரண்டாம் நாளில் சரிவை சந்தித்த இப்படம் ரூ.80 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக் அப் ஆன அப்படம் வசூலையும் வாரிக்குவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
LEO box office

LEO box office

அதன்படி லியோ திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.404 கோடி வசூலை அள்ளி உள்ளது. விமர்சகர்கள் கலவையான விமர்சகர்கள் கொடுத்தாலும், பேமிலி ஆடியன்ஸிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் ஒரு படத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். அந்த வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேமிலி ஆடியன்ஸின் வரவேற்பு அதிகளவில் இருந்ததோடு, அவர்களுக்கு படமும் மிகவும் பிடித்துப்போனதால் லியோ பாக்ஸ் ஆபிஸிலும் பிக் அப் ஆனது.

44
LEO collection

LEO collection

இதன்மூலம் நடிகர் விஜய்யின் கெரியரிலேயே அதிக வசூலை வாரிக்குவித்த படம் என்கிற சாதனையை லியோ படைத்துள்ளது. இதற்கு முன் வாரிசு ரூ.310 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை லியோ முறியடித்துள்ளது. இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை என்பதால் இந்த இரு தினங்களில் லியோ படம் நிச்சயம் 600 கோடி வசூலை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் ஜெயிலர் படத்தின் லைப் டைம் வசூலான ரூ.650 கோடியை லியோ திரைப்படம் ஒரே வாரத்தில் முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகர் அஜித் ஆசை ஆசையாய் கட்டிய வீடு... சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டம் ஆக்கிய அதிகாரிகள் - காரணம் என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
திரிஷா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved