இன்று முதல் OTTயில் லியோ.. அப்போ இவ்வாண்டு வசூல் வேட்டையில் வெற்றி பெற்றது தலைவரா? தளபதியா? - ரிப்போர்ட் இதோ!
Leo Vs Jailer : தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இன்று நவம்பர் 24ம் தேதி OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து லியோ மற்றும் ஜெயிலர் படங்களுக்கு மத்தியில் நடந்த போட்டியின் முடிவுகள் இப்பொது வெளியாகியுள்ளது.
Jailer box office
இரண்டாவது முறையாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வந்த திரைப்படம் தான் லியோ.
இந்நிலையில் லியோ திரைப்படம் OTTயில் வெளியாகி உள்ள நிலையில், இவ்வாண்டு ஜெய்லர் மற்றும் லியோ திரைப்படத்திற்கு இடையே நடந்த போட்டியில் யார் ஜெயித்தது என்கின்ற தகவலை இப்பதிவில் காணலாம்.
Jailer Movie
ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான நிலையில் முதல் நாள் வசூலாக 100 கோடியை தாண்டியது. மேலும் ஒரு வாரத்தில் 375 கோடியும், 12 நாட்களில் 510 கோடியும், 16வது நாளில் 525 கோடியும் கடந்து சாதனை படைத்தது ஜெயிலர் படம்.
அதேபோல லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் 148 கோடியும், 7 நாட்களின் முடிவில் 461 கோடியும், 12ம் நாள் முடிவில் 540 கோடியும் பெற்று முன்னிலை வகித்தது.
Jailer Movie Collection
ஜெயிலர் திரைப்படம் தமிழக அளவில் 189 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 84 கோடியும் கர்நாடகாவில் 63 கொடியும், கேரளாவில் 57 கோடியும் மற்ற மாநிலங்களில் 15. 25 கோடியும் வசூல் சாதனை செய்து, மொத்தமாக 409 கோடியை இந்திய அளவில் வசூலித்தது. ஆகவே ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் சுமார் 605 கோடி.
Leo movie
அதிக நேரத்தில் லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 231 கோடியும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 89 கோடி ரூபாயும், கேரளாவில் 60 கோடி ரூபாயும் மற்ற மாநிலங்களில் 41 கோடி ரூபாயும் வசூல் செய்தது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 620 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தற்பொழுது வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில் ஜெயிலர் திரைப்படத்தை லியோ திரைப்படம் முந்தி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.