ஒருவழியாக எல்சியு-வில் இணைந்த விஜய்... லியோவில் கேமியோ பண்ணிய அந்த மாஸ் ஹீரோ யார் தெரியுமா?
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி உள்ள லியோ திரைப்படம் எல்சியுவில் உள்ளதால் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ள நடிகர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
vijay, Lokesh kanagaraj
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் 5-வதாக இயக்கி உள்ள திரைப்படம் தான் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. லியோ படத்தில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் அதில் உள்ள சர்ப்ரைஸான விஷயங்களை லீக் செய்து வருகின்றன.
Lokesh Kanagaraj and Vijay
லியோ ரிலீசுக்கு முன்னர் பெரும்பாலானோர் எழுப்பியது இப்படம் எல்சியு-வில் உள்ளதா? இல்லையா என்கிற கேள்வி தான். அதற்கு நேற்று வரை விடை கூற மறுத்த லோகேஷ் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார். படத்தின் முதல்காட்சி பார்த்த ரசிகர்கள், லியோ படம் எல்சியு-வில் உள்ளதை உறுதி செய்து உள்ளனர். இதன்மூலம் கைதி, விக்ரம் ஆகிய படங்களை தொடர்ந்து லியோவும் லோகேஷின் சினிமாடிக் யூனிவர்ஸில் இணைந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
george maryan
லியோ எல்.சி.யு.வில் இருந்தால் அதில் யார் கேமியோ என்பது தான் அடுத்த கேள்வியாக இருக்கும். படம் வெளியாகும் முன்னர் இதில் சூர்யா கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும், கமல் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால் உண்மையில் அவர்கள் இருவருமே இதில் நடிக்கவில்லையாம். இதில் ஒரு காட்சியில் மட்டும் நடிகர் ஜார்ஜ் மரியான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இவர் கைதி படத்தில் நடித்தவர் ஆவார்.
leo is in LCU
அதேபோல் கமல்ஹாசனை கேமியோ ரோலில் நடிக்க வைக்காமல், விக்ரம் படத்தில் கார்த்தியின் முகத்தை காட்டாமல் அவரின் வாய்ஸ் ஓவரை பயன்படுத்தியது போல் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவரை மட்டும் பயன்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதுவும் கிளைமாக்ஸில் விஜய்யிடம், கமல்ஹாசன் போனில் கலந்துரையாடும் படியான காட்சி அமைத்து லியோவையும் எல்சியுவில் இணைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படியுங்கள்... Leo Review : விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி சம்பவம் செய்ததா? சலிப்படைய வைத்ததா? - லியோ விமர்சனம் இதோ