- Home
- Gallery
- Yuvan Shankar Raja : "அக்கா நேரில் வந்து பாடியிருக்க வேண்டிய பாட்டு.. GOAT இரண்டாம் சிங்கிள் - எமோஷனலான யுவன்!
Yuvan Shankar Raja : "அக்கா நேரில் வந்து பாடியிருக்க வேண்டிய பாட்டு.. GOAT இரண்டாம் சிங்கிள் - எமோஷனலான யுவன்!
GOAT Second Single : இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையில், தளபதி விஜயின் GOAT படத்தில் இருந்து இன்று மாலை இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

GOAT
தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் "The Greatest of All Time". இந்த திரைப்படத்தில் இருந்து தளபதி விஜய் அவர்களுடைய பிறந்தநாள் சிறப்பு அப்டேட்டாக, ஒரு சிறப்பு வீடியோ வெளியானது.
Venkat
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் நடித்து வருகிறார். விரைவில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று அந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலும் மாலை வெளியானது.
yuvan shankar raja
யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து "விசில் போடு" என்கின்ற பாடல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் வெளியாகி உள்ளது.
Yuvan post
இந்நிலையில் இந்த பாடல் குறித்து பேசிய யுவன் சங்கர் ராஜா, இந்த பாடல் பதிவின்போது தனது அக்கா உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்பி இந்த பாடலை பாடி முடிப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது தான், அவர் உயிர் பிரிந்தது என்று கூறியுள்ளார். அவருடைய குரலை பயன்படுத்த உதவிய அனைவருக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்து எமோஷனலாக பேசியுள்ளார்.