இன்னும் ஒரே நாள் தான்.. அடுத்த மாஸ் சம்பவத்துக்கு ரெடியான வெங்கட் - GOAT ட்ரைலர் அப்டேட் இதோ!
GOAT Trailer : பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
GOAT Movie
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தனது 68வது திரைப்பட பணிகளை துவங்கினார். முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
சினிமா ஷூட்டிங்.. சீன் எடுக்கும் முன் கிளாப் போர்டு அடிக்க என்ன காரணம் தெரியுமா?
Thalapathy vijay GOAT
தளபதி விஜய் இப்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் மூத்த தமிழ் திரை உலக நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் மற்றும் நடிகர் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்த வருகின்றனர். அதேபோல நடிகைகள் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்திரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Spark Third Single
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து "விசில் போடு" மற்றும் "சின்ன சின்ன கண்கள்" என்ற இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு "ஸ்பார்க்" என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் AI தொழில்நுட்பத்தில் வெளியானது. ஆனால் அந்த பாடல் பல Trollகளுக்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே.
GOAT Trailer
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ஏற்கனவே வெளியிட்ட தகவலின்படி இன்று GOAT பட ட்ரைலர் குறித்த அப்டேட் வெளியாகும் என்று அறிவித்தார். அதன்படி வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை தளபதி விஜயின் GOAT திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சியான் விக்ரம் தேசிய விருது வாங்கினாரா? எந்த படத்திற்கு தெரியுமா?