- Home
- Gallery
- அரசியல்வாதியாக முதல் ஆடியோ லாஞ்ச்.. தடபுடலாக நடக்க உள்ள விஜய்யின் கோட் பட இசை வெளியீட்டு விழா- எப்போ தெரியுமா?
அரசியல்வாதியாக முதல் ஆடியோ லாஞ்ச்.. தடபுடலாக நடக்க உள்ள விஜய்யின் கோட் பட இசை வெளியீட்டு விழா- எப்போ தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

GOAT
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சுருக்கமாக கோட் என அழைக்கப்படும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி மற்றும் நடிகை சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
GOAT movie Update
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடம் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, லைலா, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதுதவிர நடிகை திரிஷாவும் ஒரு பாடலுக்கு மட்டும் விஜய்யுடன் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேமியோ ரோலில் நடிக்க வைத்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... கணவரின் கைகோர்த்து ரொமான்டிக் லுக்.. மாடர்ன் உடையில் கலக்கும் வரலட்சுமி சச்தேவ் - கலக்கல் பிக்ஸ்!
GOAT movie Vijay
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று இளமை கதாபாத்திரம் என்பதால் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டி இருக்கின்றனர். கோட் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளுக்கு அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி தற்போது கோட் பட ஆடியோ லாஞ்ச் பற்றிய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.
GOAT Movie Audio launch
அதன்படி கோட் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை வருகிற ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்த பிளான் போட்டு உள்ளனர். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் நடக்கும் முதல் இசை வெளியீட்டு விழா என்பதால் இது கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோ லாஞ்சுக்கு முன்னரே ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோட் படத்தில் விஜய், திரிஷா இணைந்து நடனமாடிய பாடல் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சென்னையில் படித்து டாக்டரான மீனாட்சி.. மஞ்சு வாரியரை பெருமைப்படுத்திய அவர் மகள் - வெளியான ஸ்வீட் பிக்ஸ்!