விவேக் வீட்டில் விஷேஷம்.. வாழ்த்த வந்த அட்லீ & பிரியா - தலைமை தாங்கிய தளபதி விஜய் - Viral Pics!
Thalapathy Vijay : பிரபல பாடலாசிரியர் விவேக்கின் மனைவியுடைய வளைகாப்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய், இயக்குனர் அட்லீ உள்ளிட்ட பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
Actor Vijay
தமிழ் திரையுலகில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான "எனக்குள் ஒருவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக களம் இறங்கியவர் தான் விவேக். தொடர்ச்சியாக "36 வயதினிலே", "இன்று நேற்று நாளை", "இறுதிச்சுற்று" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நல்ல பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். இப்பொது தமிழ் சினிமாவின் டாப் பாடலாசிரியராகவும் அவர் திகழ்கிறார்.
பாக்ஸ் ஆபிஸில் டம்மி பீஸ் ஆகிப்போன கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா" - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ!
Thalapathy Vijay
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் போன்ற நடிகர்களுக்கும் பாடல்களை எழுதியுள்ள விவேக், முதல் முறையாக தளபதி விஜயுடன் இணைந்த திரைப்படம் தான் மெர்சல். அதிலும் குறிப்பாக தளபதி விஜய்க்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டான "ஆளப்போறான் தமிழன்" என்கின்ற பாடலை எழுதியது விவேக் தான்.
Thalapathy vijay and Vivek
தொடர்ச்சியாக தளபதி விஜயின் சர்க்கார், பிகில், பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்களில் பல பாடல்களை எழுதியுள்ள விவேக்கின் மனைவிக்கு வளைகாப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் விவேக்கின் மெர்சல் திரைப்பட குழுவினர் நேரில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்.
Director Atlee
குறிப்பாக GOAT பட பணிகளிலும் தனது கட்சி பணிகளிலும் பயங்கர பிசியாக உள்ள தளபதி விஜய் இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
வளச்சு வளச்சு 25 முறை நேருக்கு நேர் மோதிய விஜயகாந்த், ராமராஜன் - இறுதியில் யாருக்கு வெற்றி?