600 கோடி வசூல் செய்த ஜெயிலர் படத்தையே ப்ரீ புக்கிங்கில் அலற விட்ட 'லியோ'! தளபதி ரசிகர்களின் மாஸ் சம்பவம்!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' படம் வெளியாக இன்னும், சில தினங்களே உள்ள நிலையில், இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி உள்ளது.
Thalapathy Vijay Varisu movie
தளபதி விஜய் நடிப்பில், கடைசியாக வெளியான 'வாரிசு' திரைப்படம்... தரமான ஆக்ஷன் காம்பேக்ட் மூவி என்றாலும், ஒரு சில ரசிகர்கள் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என கூறப்பட்டது. அதே போல் ஒரு சிலர் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களையே தெரிவித்தனர்.
Beast Flop
தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி இருந்ததாலோ என்னவோ, தெலுங்கு வாடை வீசியதாகவே விமர்சனங்கள் பறந்தது. மேலும் 'வாரிசு' படத்திற்கு முன்பு வெளியான 'பீஸ்ட்' படமும் படு தோல்வியை சந்தித்ததால், தற்போது தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் 'லியோ' தான்.
திருமணத்திற்கு முன்பே தனுஷ் பட நடிகை கர்ப்பமா? 7 மாதத்தில் பிறந்த குழந்தை.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Vijay join hands with lokesh kanagaraj
'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதி, நெருங்க.. நெருங்க... படத்தின் சில அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
Jailer Pre Booking
அந்த வகையில், 'லியோ' திரைப்படம் UK -வில் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறதாம். ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் முதல் நாளே, ப்ரீ புக்கிங்கில் £222,777 வசூல் செய்தது. இது இந்திய மதிப்பில் ரூ 2,26,37,462 கோடி ஆகும்.
Leo Pre Booking:
அதே போல் லியோ படம் வெளியாக 23 நாட்கள் இருக்கும் நிலையில் UK -வில் £223,005 வரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் . இதன் இந்திய மதிப்பில் ரூபாய் 2,26,64,299 ஆகும். இது ஜெயிலரை விட அதிகமாகும். எனவே லியோ படத்தை இந்தியாவில் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் வரவேற்க ரசிகர்கள் தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.