தென்னாபிரிக்கா.. தாய்லாந்து.. அப்போ அடுத்து? தளபதி 68 படக்குழுவின் நெக்ஸ்ட் மூவ் இதுதானா? அப்டேட் இதோ!
Thalapathy 68 Update : லியோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது அடுத்த திரைப்பட பணிகளை தற்பொழுது முழு வீச்சில் செய்து வருகிறார். இறுதியாக தாய்லாந்து நாட்டில் நடந்த படப்பிடிப்பு பணிகளை முடித்த அவர் தற்பொழுது சென்னையில் உள்ளார்.
Thalapathy 68 Movie Team
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் திரைப்படம் தான் தளபதி 68. யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் மூத்த நடிகர், நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா மாற்றும் லைலா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.
Thalapathy 68
அண்மையில் இந்த திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் போடப்பட்ட நிலையில் சென்னையில் இந்த படத்திற்கான ஒரு பாடல் படமாக்கப்பட்டது. அதன் பிறகு சவுத் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்ற படக்குழு அங்கு ஒரு சண்டைக் காட்சி படமாக்கியதாக கூறப்பட்டது. அதன் பிறகு ஒட்டுமொத்த பட குழுவும் தாய்லாந்து நாட்டுக்கு சென்றனர்.
Thalapathy 68 Poojai
அங்கு படபிடிப்பு பணிகள் முடித்த பிறகு, தளபதி விஜய் அவர்கள் சென்னை திரும்பினார். இந்த சூழலில் தளபதி 68 பட குழு தற்பொழுது இஸ்தான்புல் நாட்டிற்கு அடுத்தபடியாக செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் பல்வேறு நாடுகளில் ஷூட்டிங் மேற்கொள்ளும் வெகு சில திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாக மாறி உள்ளது.
Thalapathy Vijay
மேலும் வெங்கட் பிரபு இயக்கம் இந்த படம் ஒரு சயின்ஸ்பிக்ஷன் கதையாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. பல வெற்றிப்படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இந்த படத்தையும் மிக நேர்த்தியாக அமைத்து வருகின்றார்.