கருப்பு நிற ஆடையில் திக்குமுக்காட வைக்கும் அழகு.. தளபதி நாயகினா சும்மாவா - மீனாட்சி சௌத்ரியின் கூல் பிக்ஸ்!
தளபதி விஜய் அவர்கள் தனது லியோ திரைப்பட பணிகளை முடித்துள்ள நிலையில், அடுத்தபடியாக தனது 68வது திரைப்பட பணிகளில் விரைவில் களமிறங்க உள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Actress Meenakshi Chaudhary
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது, மீனாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தார்.
Actress Meenakshi
பிரபல மாடல் அழகியான மீனாட்சி, ஹரியானாவில் பிறந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான upstarts என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகி பட்டங்கள் சிலவற்றையும் இவர் வென்றுள்ளார்.
Heroine Meenakshi
அதன் பிறகு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த மீனாட்சி சவுத்ரி, இந்த ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ஆர. ஜே பாலாஜி அவர்களின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.