அடுத்த 5 வருஷத்துக்கு யாரும் கிட்ட கூட நெருங்க முடியாது... அம்புட்டு பிசி! லோகேஷின் அடுத்த 5 படங்களின் லிஸ்ட்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து இயக்க உள்ள 5 படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Lokesh kanagaraj
நான்கே படங்களில் தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் மாஸ் ஹிட் கொடுத்தார். இதையடுத்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ், அப்படம் மூலம் LCU (Lokesh Cinematic Universe) என்கிற பெயரில் தனக்கென ஒரு தனி யுனிவர்சை உருவாக்கினார்
vijay, lokesh kanagaraj
இப்படி தொடர்ந்துப் 4 ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், லியோ படம் மூலம் 5-வது வெற்றியை ருசிக்க தயாராகி உள்ளார். விஜய் நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைவசம் அடுத்தடுத்து 5 படங்கள் உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தலைவர் 171
லியோ படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் கமிட் ஆன திரைப்படம் தான் தலைவர் 171. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்க உள்ளது.
கைதி 2
தலைவர் 171 படத்துக்கு பின் கைதி 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ். கைதி படத்தின் முதல் பாகமே வேறலெவல் ஹிட் அடித்ததால் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. கார்த்தி நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
ரோலெக்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் மிகவும் சர்ப்ரைஸாக இடம்பெற்ற கேரக்டர் என்றால் அது சூர்யாவின் ரோலெக்ஸ் கேரக்டர் தான். 5 நிமிஷம் மட்டுமே வந்தாலும் செம்ம மாஸான கேரக்டராக அது அமைந்தது. அதை வைத்து ஒரு தனி படமே எடுக்க உள்ளதாகவும் லோகேஷ் அறிவித்துள்ளார். சூர்யா இதில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இரும்புக்கை மாயாவி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2016-ம் ஆண்டு இயக்க கமிட் ஆன திரைப்படம் தான் இரும்புக்கை மாயாவி. பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார். இப்படம் தான் தன்னுடைய கனவு திரைப்படம் என கூறிய லோகேஷ் கனகராஜ், அதற்கான கதையை 10 ஆண்டுகளாக மெருகேற்றி வருகிறாராம்.
விக்ரம் 2
லோகேஷ் கனகராஜ் உருவாக்கி உள்ள சினிமேட்டிக் யூனிவர்ஸின் கடைசி படமாக விக்ரம் 2 இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசன் தான் நடித்து தயாரிக்கவும் உள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பாணியில் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டு உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... லியோ திரையிடப்படும் திரையரங்குகளுக்கு ஷாக்.! சிறப்பு காட்சி பெயரில் போலி டிக்கெட் விற்பனை- வெளியான பகீர் தகவல்