அப்போ சீக்கிரம் விடாமுயற்சி அப்டேட் எதிர்பார்க்கலாம்.. சென்னை வந்திறங்கிய தல அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்!
Thala Ajith Kumar : தல அஜித் குமார் நடிப்பில், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. பல மாதங்களுக்கு முன்பே இந்த திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது, இன்றளவும் பெரிய அளவில் அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்தது தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வந்தது.
Vignesh Shivan
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பில் முதலில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் விடாமுயற்சி. ஆனால் அதன் பிறகு விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்குவார் என்று அறிவித்திருந்தது லைகா நிறுவனம்.
Magzhil Thirumeni
ஆனால் அதன் பிறகும் இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. இறுதியாக சில வாரங்களுக்கு முன்பு தல அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகும் பல மாதங்களாக எந்தவித தகவலும் இல்லாமல் அந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது.
Thala Ajith
இந்நிலையில் தல அஜித் தனது பைக் பயணத்தை முடித்துள்ள நிலையில், துபாயில் மகிழ் திருமேனியும் தல அஜித் அவர்களும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. மேலும் வருகின்ற நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் தல அஜித் அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கி உள்ளார். அங்கு பல ரசிகர்களுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.