- Home
- Gallery
- கிடப்பில் விடாமுயற்சி.. ஜெட் வேகத்தில் Good Bad Ugly.. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எங்கே? Foreign கிளம்பிய தல!
கிடப்பில் விடாமுயற்சி.. ஜெட் வேகத்தில் Good Bad Ugly.. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எங்கே? Foreign கிளம்பிய தல!
Good Bad Ugly : ஹைதராபாத்தில் நடந்து வந்த தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Adhik Ravichandran
தல அஜித் குமார் நடிப்பில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் அது அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் "குட் பேட் அக்லி" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார் தல அஜித்.
Vidaamuyarchi
ஏற்கனவே பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படப் பணிகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நீண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னும் அந்த திரைப்படம் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
Good Bad Ugly Movie
இதனிடையே "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதனை அடுத்து அந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை சுமார் 95 கோடி ரூபாய்க்கு Netflix நிறுவனம் பெற்றது.
Ajith
தற்பொழுது ஹைதராபாத்தில் நடந்து வந்த அப்பட பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ரஷ்யாவில் இப்படத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பல சண்டை காட்சிகள் அந்த நாட்டில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக விரைவில் ரஷ்யா செல்கின்றார் தல அஜித்.