தலயின் 32 ஆண்டுகால பயணம்.. நாங்க கொண்டாடலனா எப்படி? தீ பறக்கும் போஸ்டரை வெளியிட்ட Good Bad Ugly படக்குழு!
Thala Ajith : திரையுலகில் தனது 32வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள தல அஜித்திற்கு அவருடைய ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Ajith kumar
தமிழ் திரை உலகில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான "அமராவதி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் அஜித். தொடர்ச்சியாக இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியது.
நாளுக்கு நாள் ஆண்மை இல்லாதவங்க அதிகமாகிகிட்டே இருக்காங்க! அல்லு அர்ஜுன் வெளியிட்ட 'சாலா' பட ட்ரைலர்!
SJ Suryah
ஆசை, காதல் கோட்டை மற்றும் காதல் மன்னன் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த அஜித், முதல் முறையாக அறிமுக இயக்குனர் ஒருவருக்கு கொடுத்த வாய்ப்பு நான் "வாலி" என்கின்ற திரைப்படம். அதன் பிறகு அந்த அறிமுக இயக்குனர் இன்று மிகப்பெரிய நடிகராகவும், இயக்குனராகமும் மாறியுள்ளது அனைவரும் அறிந்ததே.
vidaamuyarchi
கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் தல அஜித், தற்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருக்கிறது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களும் ஜோராக உருவாகி வருகின்றது.
Good Bad Ugly
இந்நிலையில் அஜித் தனது 32வது ஆண்டு திரையுலக வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் வகையில், அவர் இப்போது நடித்து வரும் ஆதிக் ரவிச்சந்திரனின் "குட் பேட் அக்லி" படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் அஜித்தின் 32 ஆண்டுகள்; சோதனைகளை கடந்து என்ன சாதித்தார்?