- Home
- Gallery
- அண்ணன் விட்டதை பிடித்த தம்பி.. தேர்தலில் மாஸ்காட்டிய சூப்பர்ஸ்டார்.. பவன் கல்யாணின் சொத்து மதிப்பு இவ்வளவா?
அண்ணன் விட்டதை பிடித்த தம்பி.. தேர்தலில் மாஸ்காட்டிய சூப்பர்ஸ்டார்.. பவன் கல்யாணின் சொத்து மதிப்பு இவ்வளவா?
ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அவரின் அரசியல் வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். தான் போட்டியிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த அவர் ஒருவழியாக இந்த முறை வெற்றி பெற்றுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் தொகுதியில் போட்ட பவன் கல்யான், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அனுபவமிக்க அரசியல்வாதி வங்கா கீதாவை 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். பவன் கல்யாண் 1,34,394 வாக்குகளும், காக்கிநாடாவின் முன்னாள் எம்பி வங்கா கீதா 64,115 வாக்குகளும் பெற்றனர்.
பவன் கல்யாண் மட்டும் இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை, அவரின் ஜனசேனா கட்சி வலிமைமிக்க கட்சியாக உருவெடுத்துள்ளது. 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் ஜனசேனா கட்சி வெற்றி பெற்றுள்ளது.. 10 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, பவன் கல்யாணும் அவரது கட்சியும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது..
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களுடன், 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி உடன் கூட்டணி வைத்த பவன் கல்யான், பாஜக உடன் கூட்டணி அமைக்கவும் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்தினர். இதன் மூலம் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பாஜக கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. 25 மக்களவைத் தொகுதிகளில் 21 இடங்களையும் கைப்பற்றியது.
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணின் வெற்றி அவரின் குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சிரஞ்சீவியும் பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி சில வெற்றிகளையும் ருசித்தார். பின்னர் தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து விட்டார். ஆனால் தற்போதைய வெற்றியின் மூலம் அண்ணன் விட்டதை தம்பி பிடித்துவிட்டார். இந்த வெற்றிக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாணின் மற்றொரு நடிகர் சகோதரர் நாக பாபு, சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், மருமகன் அல்லு அர்ஜுன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பவன் கல்யாண் பித்தாபுரத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக பிரச்சாரம் செய்து, ரோடு ஷோ நடத்தி வந்தார். அவரது மருமகனும், நடிகருமான வருண் தேஜ், அவரது மூத்த சகோதரர் சிரஞ்சீவி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ராம் சரண், அவரது தாயார் சுரேகா மற்றும் மாமா அல்லு அர்ஜுன் ஆகியோரும் பவன் கல்யாணுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க பித்தாபுரம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
2014 இல் ஜன சேனா கட்சியைத் தொடங்கிய பிறகு, நடிகர் அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவளித்தார். ஆந்திராவை இரண்டாகப் பிரித்ததற்காக காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த அவர், தெலுங்கு தேசம் கட்சி-பாஜக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து, அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
pawan
பின்னர் 2019 இல் பவன் கல்யாண் போட்டியிட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். அவர் விசாகப்பட்டினம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் முறையே கஜுவாகா மற்றும் பீமாவரத்தில் போட்டியிட்டார், ஆனால் இரண்டிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார்.
2019 ஆம் ஆண்டில், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பவன் கல்யாண் கூட்டணி வைத்திருந்தார். இருப்பினும், 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஜன சேனா ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது மற்றும் லோக்சபா தேர்தலில் வெற்றிபெறவில்லை.
ஒரு பகுதி நேர அரசியல்வாதி என்று விமர்சிக்கப்படும் பவன் கல்யாண், மாநில அரசியலில் தன்னை நிலைநிறுத்த தனது சொந்த நேரத்தை எடுத்துக் கொண்டார். நீண்ட காலம் அரசியலில் இருப்பேன் என்று கூறி தனக்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு ஆதரவாளர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். .
தனது பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த பவன் கல்யாண் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் கவனமாக இருந்தார், இதனால் அவர் அதிக சீட் எண்ணிக்கைக்காக கூட பேரம் பேசவில்லை. ஒய்.எஸ்.ஆர்.சி.பி-க்கு எதிரான வாக்குகள் பிளவுபடுவதைத் தவிர்க்க, தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி செயல்படுவதை உறுதிசெய்ய, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க அவர் ஒப்புக்கொண்டார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். இதன் மூலம் அவருக்கு இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது.
இந்த நிலையில் பவன் கல்யாணின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ. 164 கோடி என்று கூறப்படுகிறது. ரூ. 14 கோடி மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக் மற்றும் ரேஞ்ச் ரோவர் உட்பட 11 ஆடம்பர சொகுசு கார்களை அவர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.