- Home
- Gallery
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கி.மீ பயணிக்கலாம்.. வாட்டர் ப்ரூஃப் பேட்டரி.. டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை?
ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கி.மீ பயணிக்கலாம்.. வாட்டர் ப்ரூஃப் பேட்டரி.. டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை?
டாடா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை இங்கு முழுமையான தெரிந்து கொள்ளுங்கள்.

Tata Electric Scooter
டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக வாடிக்கையாளர்கள் இந்த பல ஆண்டுகளாக காத்திருந்தனர். தற்போது டாடா அறிமுகம் செய்துள்ளது. இது சக்திவாய்ந்த அம்சங்கள், அற்புதமான மைலேஜ் மற்றும் எதிர்பாராத பல விஷயங்கள் உள்ளது.
Tata Company
டாடா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி அலர்ட், கால் மற்றும் மெசேஜிங், ஆண்டி-திஃப் அலாரம் என பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், உங்களுக்கு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர் வழங்கப்பட்டுள்ளது.
Electric Scooters
இந்த ஸ்கூட்டர் 2.7 kW பவர் மோட்டார் மற்றும் 4 kW பேட்டரி திறன் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ வரை ஓடக்கூடியது.
Electric Vechicles
வாட்டர் ப்ரூஃப் பேட்டரி அமைப்புடன், ரிசர்வ் அசிஸ்ட் அம்சமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலையைப் பற்றி பார்க்கும்போது, வெவ்வேறு மாநிலங்களில் விலை மாறுபடலாம்.
Tata Electric Scooter Price
இந்த ஸ்கூட்டரை ரூ.90,000க்கு நீங்கள் வாங்கலாம். ஆட்டோ சென்சார் மோட் போன்ற நவீன வசதிகளுடன் இது பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய, உங்கள் அருகில் உள்ள ஷோரூமிற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.
3 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. 85 கிமீ மைலேஜ்.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு?