- Home
- Gallery
- Tamilnadu Register Offices: பத்திரப்பதிவு துறை வெளியிட்ட குட்நியூஸ்... முகூர்த்த நாள் சிறப்பு சலுகை அறிவிப்பு!
Tamilnadu Register Offices: பத்திரப்பதிவு துறை வெளியிட்ட குட்நியூஸ்... முகூர்த்த நாள் சிறப்பு சலுகை அறிவிப்பு!
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Register Office
இதுதொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Tamilnadu Registrars offices
தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! எந்த மாவட்டம் தெரியுமா?
Suba Muhurtham
எனவே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?