ஆன்மீக சுற்றுலா, சுபநிகழ்ச்சி போகனுமா? இனி அரசு பேருந்தை எடுத்துட்டு போங்க! போக்குவரத்து துறை மாஸ் அறிவிப்பு!
சுப நிகழ்ச்சிகள், அறுபடை வீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
government bus
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் (UD, A/C Seater cum Sleeper and Non A/C Seater cum Sleeper) தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
government bus
இந்நிலையில் குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த ஊர்தி (Contract Carriage) அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
இதையும் படிங்க: Ration Shop: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!
government bus
இப்பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் மற்றும் இதர இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு www.tnstc.in என்ற இணையதள முகவரி மற்றும் 94450 14402, 94450 14424, 94450 14463 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.