- Home
- Gallery
- வானத்தை போல நடிகர் முதல் பிக்பாஸ் பிரபலம் வரை.. பிசினஸில் கொடிகட்டி பறக்கும் தமிழ் டிவி பிரபலங்கள்..
வானத்தை போல நடிகர் முதல் பிக்பாஸ் பிரபலம் வரை.. பிசினஸில் கொடிகட்டி பறக்கும் தமிழ் டிவி பிரபலங்கள்..
வெற்றிகரமான தொழில்களை நடத்தி வரும் தமிழ் நடிகர்களின் பட்டியலை இந்த பதில் பார்க்கலாம்.

வெள்ளித்திரை பிரபலங்களை போலவே சின்னத்திரை பிரபலங்களும் நடிப்பதை தவிர வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம் வருகின்றனர். அந்த வகையில் வெற்றிகரமான தொழில்களை நடத்தி வரும் தமிழ் நடிகர்களின் பட்டியலை இந்த பதில் பார்க்கலாம்.
பாபா, பாலா உள்ளிட்ட படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர் சந்தோஷி. இதை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் சென்ற அவர் மரகத வீணை, அரசி, அண்ணி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் நடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். அப்போதிருந்து, அவர் ஒரு தொழில்முறை ஒப்பனை கலைஞராக மாறினார். சந்தொஷி சென்னையில் சொந்தமாக மேக்கப் ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
ஆனந்தம், அஹல்யா, மலர்கள், பந்தம், இதயம் மற்றும் யாரடி நீ மோகினி ஆகிய சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ் மிகவும் பிரபலமானவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர, ஸ்ரீகுமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பப்லூ என்று அழைக்கப்படும் நடிகர் பிருதிவிராஜ தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் வில்லன், துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் அரசி, வாணி ராணி, கண்னான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சென்னையின் புறநகரில் பல ஹோட்டல்களை சொந்தமாக வைத்திருக்கிறார்.
Vanitha vijayakumar
நடிகையும் பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் முன்னாள் போட்டியாளருமான வனிதா விஜய்குமார் சென்னையில் சொந்தமாக ஃபேஷன் பொட்டிக்கை நடத்தி வருகிறார். நடிப்பதில் பிசியாக இருந்தா டிசைனிங்கிலும் வனிதாவுக்கு ஆர்வம் அதிகம். அவர் பல திருமண புடவைகள், விருப்பப்படி செய்யப்பட்ட பிளவுஸ்கள் மற்றும் சல்வார்களை வடிவமைத்துள்ளார்.
நடிகையும் தொழிலதிபருமான ஸ்ருத்திகா சமையல் ரியாலிட்டி ஷோவான குக்கு வித் கோமாலி மூலம் புகழ் பெற்றார். ஊடக வாழ்க்கையைத் தவிர, ஸ்ருத்திகா அழகுசாதனத் துறையிலும் ஆர்வமாக உள்ளார். நடிகை இரண்டு பிரபலமான அழகுசாதனப் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.
நடிகை மகாலட்சுமி தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் இவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திர சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்..
முன்னாள் பிக் பாஸ் தமிழ் முன்னாள் போட்டியாளரும் நடிகருமான சஞ்சீவ் வெங்கட் தனது குடும்பம் நடத்தும் காபி ஷாப் தொழிலையும் கவனித்து வருகிறார். நடிகர் தற்போது அவர்களின் அனைத்து காபி ஷாப் கிளைகளையும் கவனித்து வருகிறார்.
நடிகையும், பிக்பாஸ் தமிழ் முன்னாள் போட்டியாளருமான மகேஸ்வரி நடிகை என்பதை தாண்டி, அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபரும் ஆவார். அவர் சொந்தமாக ஒரு உணவகத்தை வைத்திருக்கிறார். மேலும் பேஷன் பொட்டிக் போன்ற பல வணிகங்களில் இறங்கியுள்ளார்.