- Home
- Gallery
- சீரியலில் ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகையா இது? மார்டன் ட்ரெஸ்ஸில் இருக்கும் க்யூட் போட்டோஸ்..
சீரியலில் ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகையா இது? மார்டன் ட்ரெஸ்ஸில் இருக்கும் க்யூட் போட்டோஸ்..
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடித்த நண்பேண்டா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜனனி அசோக்குமார்.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற படத்தில் அவர் நடித்தார். பின்னர் திரைப்படங்கள் தொடர்ந்து சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின்னர் சின்னத்திரையில் அறிமுகமான அவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார். மௌன ராகம், செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் என பல ஹிட் சீரியல்களில் முக்கிய கதாப்பாதிரத்தில் நடித்தார்.
தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் லீட் ரோலில் ஜனனி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சீரியலில் ஹோம்லி லுக்கில் எப்போதும் புடவையில் இருக்கும் ஜனனி மார்டன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாலி தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் ஜனனி, மார்டன் ட்ரெஸ்ஸில் கூலாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. மேலும் ஜனனி மிகவும் க்யூட்டாக இருப்பதாக அவரின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.