பயணிகளிடம் ஒழுங்காக நடக்க வேண்டும்.. நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை ..
பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டுக்கு சில்லறையாக தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது என நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.
Government Transport Corporation
மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
Transport Corporation
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதித் தொகையை வழங்க வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
TNSTC
பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திட வேண்டும்.
Bus Conductor
பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..