90களில் பிரபலமாக இருந்த இந்த நடிகைகளை ஞாபகம் இருக்கா? இப்ப என்ன செய்றாங்க தெரியுமா?
90களில் பிரபலமாக இருந்து காணாமல் போன நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மஞ்சரி
பிரபல சின்னத்திரை நடிகை மஞ்சரி.. உறவுகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருந்தார். அண்ணாமலை, கோலங்கள், அலைகள் போன்ற மெகா ஹிட்டான சீரியல்களில் நடித்ததன் மூலம் மஞ்சரி பிரபலமானார். தென்னிந்தியாவில் அதிக சீரியல்களில் நடித்தவர் என்றால் அது இவர் தான். மஞ்சரி 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டதாகவும், அங்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மோகினி :
90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மோகினி. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது அழகின் மூலம் நடிப்பின் மூலமும் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் திருமணமாகி வாஷிங்டனில் செட்டிலாகி விட்டார். பிராமின் குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும் தற்போது மத போதகராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அபர்ணா
தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நடித்தவர் அபர்ணா. முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற அவர் பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார். பின்னர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். மேலும் அவர் தற்போது பல பிசினஸை நடத்தி வருகிறாராம். இவர் 2 பள்ளிக்கூடங்களை நிர்வகித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சில தொலைக்காட்சி நிறுவனங்களில் கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் அபர்ணா இருப்பதாக கூறப்படுகிறது.
gayatri jayaram
காய்த்ரி ஜெயராம் :
தமிழில் மனதை திருடி விட்டாய் படத்தின் மூலம் அறிமுகமானவர் காய்த்ரி ஜெயராம். மஞ்ச காட்டு மைனா படத்தின் மூலம் பிரபலான இவர் பின்னர் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வசீகரா, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்தார். பின்னர் தமிழ் திரையுலகில் இருந்து காணாமல் போன அவர், பின்னர் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.