MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Southern Railway: பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்..!

Southern Railway: பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்..!

கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்வை வெளியிட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jun 05 2024, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Summer Special Train

Summer Special Train

கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதேபோல், பண்டிகை நாட்கள், சிறப்பு விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தாம்பரம் டூ மங்களூரு மற்றும் மங்களூரு டூ தாம்பரம் இடையே 14 பெட்டிகளுடன் கூடிய குளிர் சாதன வசதி கொண்ட வாரம் இருமுறை சிறப்பு ரயில்  7ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

24
Southern Railway

Southern Railway

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தாம்பரத்தில் இருந்து ஜூன் 7, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை) மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்-06047) மறுநாள் காலை 6.55 கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றடையும்.

34
Tambaram to Mangaluru

Tambaram to Mangaluru

மறுமார்க்கமாக, மங்களூருவில் இருந்து ஜூன் 8, 10, 15, 17, 22, 24, 29 மற்றும் ஜூலை 1ம் ஆகிய தேதிகளில் (சனி மற்றும் திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு வரும் சிறப்பு ரயில் (06048) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

44
Train Stopping

Train Stopping

இந்த ரயிலானது, வரும் ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஒட்டப்பாலம், சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தென்னக இரயில்வே
கோடைக்காலம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved