- Home
- Gallery
- இன்னும் சரியான படம் அமையல.. சூப்பர் நடிகர்கள் தான் - ஆனாலும் கோலிவுட்டில் ஹிட் அடிக்காத அண்டை மாநில நடிகர்கள்!
இன்னும் சரியான படம் அமையல.. சூப்பர் நடிகர்கள் தான் - ஆனாலும் கோலிவுட்டில் ஹிட் அடிக்காத அண்டை மாநில நடிகர்கள்!
Heroes of Other Languages : கோலிவுட் உலகின் ரசிகர்களை பொறுத்தவரை, மொழி என்பது ஒரு தடையில்லை. திறைமையிருக்கும் எல்லா மாநில கலைஞர்களையும் வரவேற்கும் பண்பு தமிழ் ரசிகர்களிடம் உண்டு.

Shivarajkumar
தமிழ் திரையுலகை பொறுத்தவரை பிற மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் தமிழ் மொழியிலும் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளனர். மம்மூட்டி மற்றும் மோகன் லால் துவங்கி, ஜெயிலர் படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த சிவராஜ்குமார் வரை அதற்கு சாட்சி. ஆனால் சில நடிகர்கள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியும் கூட இன்னும் அவர்களுக்கான சரியான தமிழ் படம் இன்னும் அமையவில்லை என்றே கூறலாம்.
ஹாட்ரிக் வெற்றியை ருசித்தாரா ஷாருக்கான்? டங்கி திரைப்படம் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Kichcha Sudeepa
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்.. இவருக்கு இந்திய அரங்கில் அறிமுகம் தேவையில்லை. கன்னட உலகில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இவர் திகழ்ந்து வருகின்றார். கடந்த 2012 தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தளபதியின் புலி என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். தமிழ் மொழியிலும் அவர் டப் செய்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் இருப்பினும் அவருக்கு பிரேக் கொடுக்கும் அளவிற்கு தமிழில் ஒரு படம் வெளியாகவில்லை என்றே கூறலாம்.
Actor Nani
நடிகர் நானி.. பிரபல தெலுங்கு திரையுலக நடிகராக நானி கடந்த 2011ம் ஆண்டு வெளியான வெப்பம் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் நல்ல பல படங்களில் நடித்துள்ளபோதும், இன்றளவும் இவருக்கான ஒரு பிரேக் கொடுக்கும் படம் தமிழ் மொழியில் அமையவில்லை என்றே கூறலாம். உலக நாயகன் கமல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர் நானி என்பது குறிப்பிடத்தக்கது.
Kalidas Jeyaram
மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் திரையுலகின் மூலம் முன்னனி நடிகராக மாறியவர் தான் காளிதாஸ் ஜெயராம். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தும் கூட இன்னும் அவருக்கான சரியான படம் தமிழ் மொழியில் அமையவில்லை என்றே கூறலாம். இவருடைய தந்தை ஜெயராம் தமிழ் மொழியில் மிகசிறந்த நடிகராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.