- Home
- Gallery
- தன்னை விட 30 வயது குறைவான 2 நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் வெங்கடேஷ்.. அப்ப நாகார்ஜுனா, பாலய்யா மட்டும்?
தன்னை விட 30 வயது குறைவான 2 நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் வெங்கடேஷ்.. அப்ப நாகார்ஜுனா, பாலய்யா மட்டும்?
வெங்கடேஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாக்ஷி சௌத்ரி இருவரும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ள நிலையில் ஹீரோ - ஹீரோயின்களின் வயது வித்தியாசம் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. F2, F3 ஆகிய படங்களுக்கு பிறகு, இந்த வெற்றி கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. SVC 58 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இதற்கிடையில், இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தில் வெங்கடேஷின் காதலியாக மீனாட்சி சௌத்ரியும், மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் நெட்டிசன்கள் சிலர் வெங்கடேஷை ட்ரோல் செய்து வருகின்றனர். 30 வயதுக்கு மேல் வயது வித்தியாசம் உள்ள இரண்டு ஹீரோயின்களுடன் வெங்கடேஷ் ஏன் ரொமான்ஸ் செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் டோலிவுட் ஹீரோ, ஹீரோயின்களின் வயது வித்தியாசம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியது. நடிகர் வெங்கடேஷுக்கு இப்போது 63 வயது. மீனாட்சி சவுத்ரியின் வயது 27 மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் வயது 34. வெங்கடேஷை விட ஐஸ்வர்யா 30 வயது இளையவர், அதே நேரம் மீனாட்சி அவரை விட 37 வயது இளையவர் என்பதால், வயது வித்தியாசம் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
எனினும் சிலர் இந்த வெங்கடேஷுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் சமீபத்தில் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹனி ரோஸ் ஆகியோர் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெற்றி படமாக பார்க்கப்படுகிறது.
அதே போல் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான நா சமிரங்கா படத்தில் நாகார்ஜுனா நடித்திருந்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஆஷிகா ரங்கநாத்துக்கு வயது 27தான். அதாவது அவர்களுக்கு இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளி உள்ளது. எனினும் வசூல் ரீதியாகவும் இப்படம் ஹிட் அடித்துள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள். சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் முக்கியமில்லை, பார்வையாளர்களை எப்படி மகிழ்விப்பார்கள் என்பதுதான் முக்கியம் சிலர் வாதிட்டு வருகின்றனர்..