- Home
- Gallery
- Suriya : மீண்டும் ஒரு ரோலெக்ஸா? லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்துக்காக கெஸ்ட் ரோலில் சூர்யா..!
Suriya : மீண்டும் ஒரு ரோலெக்ஸா? லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்துக்காக கெஸ்ட் ரோலில் சூர்யா..!
விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டிய சூர்யா, தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.

lokesh kanagaraj
தமிழ் திரையுலகில் செம்ம பிசியான இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் இதுவரை ஐந்து படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த ஐந்துமே பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் தற்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குனர் லிஸ்டில் லோகி உள்ளார். அவர் கைவசம் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 10-ந் தேதி தொடங்க உள்ளது.
Director Lokesh Kanagaraj
இதுதவிர கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள கைதி 2, கமல்ஹாசனின் விக்ரம் 2, பிரபாஸ் உடன் ஒரு படம், சூர்யா உடன் ஒரு படம் என அவரது லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி பட வாய்ப்புகள் குவிந்தாலும் தான் 10 படங்களை மட்டும் இயக்கிவிட்டு சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும் ஒரு குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதன் காரணமாகவே அவர் கைவசம் உள்ள மற்ற கதைகளை தன்னுடைய உதவி இயக்குனர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கொடுத்து எடுத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் பெண் குறித்து பரவிய வதந்தி! முற்று புள்ளி வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு!
benz movie
அப்படி லோகேஷ் கனகராஜின் கதை ஒன்று தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பென்ஸ் என பெயரிட்டு உள்ளனர். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜே தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பென்ஸ் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படம் குறித்த மற்றுமொரு மாஸ் அப்டேட் கசிந்துள்ளது.
Lokesh Kanagaraj, Suriya
அதன்படி பென்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா 5 நிமிடங்கள் மட்டுமே வரும் ரோலெக்ஸ் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். அது மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... புதுப்படங்களால் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியல... ஆனா ஒரு படம் 29 வருஷமா தியேட்டரில் ஓடுது- அது என்ன படம்?