ஊட்டியில் நடந்த ஷூட்டிங்.. சூர்யாவிற்கு தலையில் காயம் - பாதியில் நிறுத்தப்பட்ட கார்த்திக் சுப்புராஜின் படம்!
Suriya 44 : நடிகர் சூர்யாவிற்கு, படப்பிடிப்பின் பொது தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
Karthik Subbaraj
கோலிவுட் திரை உலகில், பல வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர் தான் கார்த்திக் சுப்புராஜ். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது. இப்போது அவர் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
உனக்கென்ன அங்க வேலை..! திரிஷாவை கண்டபடி திட்டினாரா விஜய்யின் அம்மா ஷோபா? கொளுத்தி போட்ட பயில்வான்!
kanguva
ஏற்கனவே தன்னுடைய "கங்குவா" திரைப்பட பணிகளை முடித்த நடிகர் சூர்யா, தற்பொழுது விறுவிறுப்பாக தனது 44-வது திரைப்பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தமானில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு இப்பொது ஊட்டியில் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகின்றனர்..
suriya 44
விரைவில் நடிகர் சூர்யா பாலிவுட் உலகிற்கும் செல்ல இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழிலும் தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் அவர் நடிக்க உள்ளார், குறிப்பாக தனது 44வது திரைப்பட பணிகளை முடிக்கும் அவர், வெற்றிமாறனின் "வாடிவாசல்" திரைப்படத்தில் இணையுள்ளது அனைவரும் அறிந்ததே.
suriya 44 shoot
இந்நிலையில் தனது 44வது திரைப்பட பணிகளை ஊட்டியில் மேற்கொண்டு வரும் நடிகர் சூர்யாவிற்கு, படபிடிப்பின் போது தலையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது பூரண நலத்துடன் வீடு திரும்பி உள்ள அவர், இன்னும் சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Vidaamuyarchi Poster : ஸ்டைலிஷ் வில்லனாக ஆரவ்... விடாமுயற்சி படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்