- Home
- Gallery
- நழுவவிட்ட சூர்யா.. சரியாக காய் நகர்த்திய "மாவீரன்" - புதிய ஹீரோவுடன் ரெடியாகிறது சுதா கொங்கராவின் புறநானுறு!
நழுவவிட்ட சூர்யா.. சரியாக காய் நகர்த்திய "மாவீரன்" - புதிய ஹீரோவுடன் ரெடியாகிறது சுதா கொங்கராவின் புறநானுறு!
Sudha Kongara : பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ரெடியாகவிருந்த திரைப்படம் தான் புறநானுறு. GV பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Kanguva
தமிழ் திரையுலகை தாண்டி, இப்பொழுது பாலிவுட் உலகிலும் விரைவில் களமிறங்கவிருக்கிறார் பிரபல நடிகர் சூர்யா. ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி வெளியாகிறது, இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் "கங்குவா" திரைப்படம்.
விராத் கோலியுடன் டேட்டிங் வதந்தி.. இந்த விஷயம் அனுஷ்காவுக்கு தெரியுமா? ஓபனாக பேசிய தமன்னா ..
Soorarai pottru
ஏற்கனவே பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான "சூரரைப் போற்று" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யா, மீண்டும் சுதா இயக்கத்தில் "புறநானூறு" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
purananooru
ஆனால் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா தமிழ் மற்றும் பாலிவுட் உலகில் உருவாக உள்ள படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், உடனடியாக சுதா கொங்கராவின் "புறநானூறு" திரைப்படத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரபல நடிகர் ஒருவர் பக்கம் சுதாவின் பார்வை திரும்ப, அவரும் சற்றும் தாமதிக்காமல் அந்த வாய்ப்பை ஏற்றுள்ளார்.
sivakarthikeyan
கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே அவர் நடிப்பில் இந்த ஆண்டு "அயலான்" என்கின்ற திரைப்படம் வெளியான நிலையில், விரைவில் "அமரன்" திரைப்படமும், அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் சுதா கொங்கார இயக்கத்தில் உருவாகும் "புறநானூறு" திரைப்படத்தில் நாயகனாக நடிக்க சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.