- Home
- Gallery
- Suriya 44 Heroine: தளபதி முதல் சல்மான் கான் வரை பதம் பார்த்த அந்த அழகு நடிகை தான் சூர்யா 44 பட நாயகியா?
Suriya 44 Heroine: தளபதி முதல் சல்மான் கான் வரை பதம் பார்த்த அந்த அழகு நடிகை தான் சூர்யா 44 பட நாயகியா?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 44 திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் மிக பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி உள்ளது.
இது சூர்யாவின் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு, இதுவரை அவர் ஏற்று நடித்திராத வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக தயாராகி உள்ளது. கற்காலத்தில் இருந்து டைம் டிராவல் செய்து சூர்யா எப்படி எதிர்காலத்திற்கு வருகிறார், அதன் பின்னணி என்ன... என்று யூகிக்க முடியாத கதை காலத்தில் இப்படத்தை அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதத்தில் சிறுத்தை சிவா இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி ஹீரோயினாக நடித்தார். விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்.. சூர்யா தற்போது இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 44 படத்திற்கு தயாராகி உள்ளார்.
Director Karthik Subbarajs Suriyas film update out
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அந்தமானில் நடைபெற உள்ளதாகவும். ஏற்கனவே சூர்யா உட்பட படக்குழுவினர்களில் முக்கியமானவர்கள் அந்தமான் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்ததடுத்து இப்படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களும் அங்கு சென்றுகொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஏற்கனவே இப்படத்தின் வில்லன், மற்றும் முக்கிய நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில்... தற்போது இப்படத்தின் கதாநாயகி யார் என்கிற தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தில், நடிகை பூஜா ஹேக்டே தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக 2022-ஆம் ஆண்டு நடித்த பீஸ்ட் படு தோல்வியை சந்தித்தது.
அதே போல் பிரபாஸுடன் நடித்த ராதே ஷியாம், சிரஞ்சீவியின் ஆச்சார்யா, மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த கிஸ்கா பாய் கிஸ்கி ஜான் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில்... சூர்யா 44 படமாவது இவருக்கு வெற்றிப்படமாக அமைய வென்றும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.