- Home
- Gallery
- "நீடுடி வாழ்க தலைவா".. நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த் - ரெக்கை கட்டி பறக்கும் நித்திலன்!
"நீடுடி வாழ்க தலைவா".. நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த் - ரெக்கை கட்டி பறக்கும் நித்திலன்!
Nithilan Swaminathan : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து, மகாராஜா பட வெற்றிக்காக வாழ்த்தியுள்ளார்.

vijaysethupathi
"குரங்கு பொம்மை" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நித்திலன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம், இன்று தனது வெற்றிகரமான 50வது நாளில் களமிறங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் திரைவரலாற்றில் மிக முக்கிய படமாக, அதுவும் அவருடைய 50வது படமாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது மகாராஜா.
ஆஸ்கரில் கிடைத்த அங்கீகாரம்... சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தனுஷின் ராயன்
vijaysethupathi maharaja
விஜய்சேதுபதி, அனுராக், நடராஜன் மற்றும் சிங்கம் புலி என்று பல ஜாம்பவான்களை வைத்து இந்த படத்தை நேர்த்தியாக இயக்கியுள்ளார் நித்திலன். குறிப்பாக, இதுவரை காமெடியனாக மற்றும் குணச்சித்திர நடிகனாக மட்டுமே பார்க்கப்பட சிங்கம் புலியை, அனைவரும் வெறுக்கும் வண்ணம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வெற்றிகண்டுள்ளார் நித்திலன்.
Rajinikanth
இந்த சூழலில் இன்று மகாராஜா திரைப்படம் தனது 50வது நாளை எட்டியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து, அவரோடு பல விஷயங்களை உரையாடி மகிழ்துள்ளார்.
NIthilan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து பேசியுள்ள சுவாமிநாதன் "உங்களை சந்தித்தது ஒரு வாழ்க்கை புத்தகத்தை படித்தது போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது. கோலிவுட் உலகின் தங்க மகனிடம் இருந்து பெற்ற அறிவுரைகள் எனக்கு பலகாலத்திற்கு உதவும். "மகாராஜா" உங்களுக்கு எவ்வளவு பிடித்தது என்பதை என்னிடம் நீங்கள் சொல்லும் பொழுது எனக்கு வியப்பாக இருந்தது. மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி கூறுகிறேன் தலைவா, நீங்கள் நீடூடி வாழ்க" என்று கூறியிருக்கிறார்.