- Home
- Gallery
- லூலூ மால் யூசுப் அலி வீட்டு திருமணம் - மனைவியோடு சென்று பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
லூலூ மால் யூசுப் அலி வீட்டு திருமணம் - மனைவியோடு சென்று பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Super Star Rajinikanth : கேரளாவில் உள்ள பிரபல லூலூ மாலின் தலைவர் தான் யூசுப் அலி, அவரது இல்ல திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்..

rajinikanth
கேரளாவில் நடந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி இல்ல திருமணம் விழாவில் பங்கேற்று, மணமக்களை ஆசிர்வதித்துள்ளார் கோலிவுட் உலகின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தியன் 2 எப்படி இருக்கு? சிம்பிளா ரிவ்யூ சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
lulu mall
சில மாதங்களுக்கு முன்பு தனது "வேட்டையன்" பட பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில கால ஓய்வுக்கு பிறகு அமீரகம் சென்றார். அங்கு தனது நண்பரும், லூலூ மால் தலைவருமான யூசுப் அலியை சந்தித்து பேசி மகிழ்ந்தார். அப்போது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது.
radhika
இந்நிலையில் கேரளாவில் நடந்த யூசுப் அலியின் இல்ல மனவிழாவில் பங்கேற்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது மனைவி லதா ரஜினியுடன் இந்த திருமணம் நிகழ்வில் பங்கேற்றார். மேலும் பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
sarathkumar
கேரளாவில் பிறந்து இன்று அமீரகத்தில் பெரும் பணக்காரராக திகழ்ந்து வருபவர் தான் யூசுப் அலி. ரஜினிகாந்த் அமீரகம் சென்றபோது, அவரே தனது Rolls Royce காரில், ரஜினிகாந்தை அழைத்துக்கொண்டு அமீரகத்தை சுற்றிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. ரஜினியும், யூசுப் அலியும் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருகின்றனர்.
Simbu : மருமகனுக்கு பிறந்தநாள்.. பரிசுகளை அடுக்கி சேட்டை செய்த "சிம்பு மாமா" - வைரல் பிக்ஸ் இதோ!