இந்திய சினிமாவின் Top Hero தான்.. ஆனா நட்புக்காக கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்த படங்கள் எத்தனை தெரியுமா? List இதோ!
Super Star Rajinikanth : திரையுலகை பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பலர் வலம்வந்தாலும், ரஜினி என்ற கலைஞனுக்கே அது கச்சிதமாக பொருந்தும் என்பது அவர் ரசிகர்களின் கருத்து.
Rajini
இன்று தனது 171வது திரைப்பட பணிகளை மேற்கொண்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் திரை உலகின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார். அவர் திரைத்துறையில் பயணிக்க ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்குள் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறினார்.
பிக் பாஸ் : "கனத்த இதயத்தோடு எடுத்த முடிவு இது" பிக் பாஸில் இருந்து விலகிய கமல்ஹாசன் - என்ன காரணம்!
Apoorva Ragangal
தமிழ் திரையரகை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த 49 ஆண்டுகளாக நல்ல பல படங்களில் நடித்து இன்றளவும் டாப் ஹீரோவாக பயணித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அது மிகையல்ல.
super star
மிக உச்ச நடிகராக சூப்பர் ஸ்டார் பயணித்து வந்த நேரத்திலும் கூட, தனது நண்பர்களுக்காக பல திரைப்படங்களில் கௌரவ வேடம் ஏற்று நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 19 திரைப்படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபல நடிகரும், மூத்த இயக்குனருமான மௌலி இது குறித்து பேசியுள்ளார்.
Rajinikanth
"நன்றி மீண்டும் வருக" என்ற திரைப்படத்தை, பிரதாப் போத்தனை வைத்து நான் எடுத்தபோது, அதில் ரஜினியை ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க யோசித்தேன். அது குறித்து ஷூட்டிங்கில் இருந்து அவரிடம் பேச சென்ற நிலையில், சற்றும் யோசிக்கலாமல் ஓகே சொல்லி, அன்று மாலையே தனது வீட்டில் வைத்தே அந்த காட்சியை பைசா வாங்காமல் நடித்து கொடுத்தார் ரஜினி" என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
படத்தை ஒழுங்கா எடுக்காம.. கம்பி கட்ற கதையை சொல்ல வேண்டியது.. ரஜினி மகளை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்..