Rajinikanth: இமயமலை அடிவாரத்தில் நின்று கூலிங் கிளாஸுடன் கூல் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இமயமலை அடிவாரத்தில் நின்றபடி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்த கையேடு, தற்போது இமயமலைக்கு சென்று ஓய்வெடுக்க கிளம்பியுள்ளார். ஏற்கனவே பக்ரிநாத், கேதர்நாத் போன்ற புனித ஸ்தலங்களுக்கு ரஜினிகாந்த் சென்று வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின.
Rajinikanth
இதை தொடர்ந்து இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு இமயமலை அடிவாரத்தில் நின்றபாடு எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகிறது. வெள்ளை நிற வேஷ்டி சட்டை அணிந்து, ஷால் ஒன்றைபோற்றியபடி ... கூலிங் கிளாஸ் அணிந்து செம்ம கூலாக தலைவர் போஸ் கொடுக்கிறார்.
ஏற்கனவே 2014-ஆம் ஆண்டு இதே போல் ரஜினி போஸ் கொடுத்த புகைப்படத்தை இப்போது வெளியிட்டு. 10 ஆண்டுகளுக்கு பின்னரும் தலைவர் அப்படியே இருக்கிறார் என, ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்க்கு கமெண்ட் போட்டுவருகிறார்கள்.
இமையமலையில் இருந்து சென்னை திரும்பியதும் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகையுள்ள கூலி படத்தில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே முடித்து விட்ட லோகேஷ் ரஜினி படப்பிடிப்பில் இணைவதாக காத்திருக்கிறார். மேலும் கடந்த மாதம் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.