MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அகமதாபாத்தில் ஐபிஎல் 2024 முதல் தகுதிச் சுற்று – டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

அகமதாபாத்தில் ஐபிஎல் 2024 முதல் தகுதிச் சுற்று – டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2024 முதல் தகுதிச் சுற்று போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 21 2024, 07:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
KKR vs SRH IPL 2024

KKR vs SRH IPL 2024

அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2024 தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆனால், இந்த மைதானத்தில் 2ஆவது பேட்டிங் செய்த அணியே அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
KKR vs SRH, IPL 2024

KKR vs SRH, IPL 2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன்.

37
KKR vs SRH IPL 2024

KKR vs SRH IPL 2024

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

47
KKR vs SRH IPL 2024

KKR vs SRH IPL 2024

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை. மேலும், புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 14 போட்டிகளில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

57
IPL 2024 KKR vs SRH 21 May 2024 live

IPL 2024 KKR vs SRH 21 May 2024 live

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 26 போட்டிகளில் 17 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஒரு போட்டியிலும் கேகேஆர் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

67
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

முதல் முறையாக இரு அணிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் இதுவரையில் நடைபெற்ற 33 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 15 போட்டியிலும், சேஸ் செய்த அணி 18 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

77
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

இந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த ஹைதராபாத் இந்தப் போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அகமதாபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சுனில் நரைன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved