எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மோசமான சாதனை – 10ல் ஒரு வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 சுற்று போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் சாம்பியன் யார் என்பது இன்னும் 2 நாட்களில் தெளிவாக தெரிந்துவிடும். இதுவரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 2 முறை சாம்பியனாகியுள்ளது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.
IPL, SRH, Travis Head , Abhishek Sharma
ஐபிஎல் குவாலிஃபையர் 1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து குவாலிஃபையர் 2 சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
இந்தப் போட்டி இன்று சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் முதல் முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. ஆனால், இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 10 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த மைதானத்தில் விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் இந்த மைதானத்தில் மொத்தமாக 83 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 48 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 35 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 10 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 போட்டியிலும் 2ஆவது பேட்டிங் செய்த அணி 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
இதன்படி பார்த்தால் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் ஜெயிக்கும் அணியானது பவுலிங் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.