ஸ்டார்க் வேகத்தில் சரண்டரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆறுதல் அளித்த ராகுல் திரிபாதி – SRH 159 ரன்கள் குவிப்பு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 முதல் தகுதிச் சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
ஐபிஎல் 2024 தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், இந்த மைதானத்தில் 2ஆவது பேட்டிங் செய்த அணியே அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படியிருக்கும் போது முதலில் பேட்டிங் தேர்வு செய்து தவறு செய்துவிட்டார்.
KKR vs SRH IPL 2024
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன்.
KKR vs SRH IPL 2024
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஹெட் முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வைபவ் அரோரா வீசிய 2ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
KKR vs SRH IPL 2024
மிட்செல் ஸ்டார்க் வீசிய 3ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் நிதிஷ் ரெட்டி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி பந்தில் ஷாபாஸ் அகமது ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்டு ஆனார். இதன் மூலமாக ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு தான் ஒர்த் என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் முக்கியமான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
KKR vs SRH IPL 2024
பின்னர் ராகுல் திரிபாதி மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், திரிபாதி 14 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், அவுட் கேட்டும் நடுவர் கொடுக்கவில்லை. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் ரெவியூ எடுக்கவில்லை.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
ஆனால், டிவி ரீப்ளேயில் பந்து ஸ்டெம்பில் பட்டது தெளிவாக தெரிந்தது. விக்கெட்ஸ் ஹிட்டிங் தான். அதன் பிறகு திரிபாதி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். கிளாசென் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 55 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
இம்பேக்ட் பிளேயராக வந்த சன்வீர் சிங் கோல்டன் டக்கில் வெளியேறினார். அப்துல் சமாத் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து புவனேஷ்வர் குமார் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதன் பிறகு 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
கடைசியாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.