சுந்தர் சி.. வைகை புயல்.. மீண்டும் சேரும் முரட்டு காம்போ! - ஹீரோயின் யார்?
Sundar C : வைகைப்புயல் வடிவேலு மாற்று இயக்குனர் சுந்தர் சி ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். அந்த பட பணிகளும் இப்பொது துவங்கியுள்ளது.

murai maaman
கடந்த 1995ம் ஆண்டு தமிழில் வெளியான "முறை மாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய இயக்குனர் தான் சுந்தர் சி. இப்பொழுது கோலிவுட் உலகின் சூப்பர் ஹிட் இயக்குனராகவும், நடிகராகவும் அவர் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
kaipulla
அதே போல தமிழ் சினிமா வரலாற்றில் "வின்னர்" என்கின்ற திரைப்படமும், "கைப்புள்ள" என்கின்ற கதாபாத்திரமும் காலத்துக்கும் அழியாத புகழுக்கு உரிய ஒன்றாகும். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் தான் முதல் முறையாக வடிவேலும் அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.
Maamannan
அதன் பிறகு 3 திரைப்படங்களில் தான் வடிவேலு, சுந்தர் சி இயக்கத்தில் நடித்திருக்கிறார் என்ற பொழுதும், அந்த 3 திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறியது. அதன் பிறகு நீண்ட காலம் சுந்தர் சி-யோடு வடிவேலு பயணிக்காமலேயே இருந்து வந்தார்.
Rashi Khanna
இந்நிலையில் தற்பொழுது சீரியஸான கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழ்பெற்ற வடிவேலுவை, மீண்டும் காமெடி கிங்காக களமிறங்க உள்ளார் சுந்தர் சி. இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகள் கூட ஏற்கனவே துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் பிரபல நடிகை ராஷிக் கண்ணா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.