- Home
- Gallery
- Aranmanai 4 : தியேட்டரில் 100 கோடி வசூலித்த அரண்மனை 4 படத்தை இனி ஓடிடியிலும் பார்க்கலாம் - ரிலீஸ் தேதி இதோ
Aranmanai 4 : தியேட்டரில் 100 கோடி வசூலித்த அரண்மனை 4 படத்தை இனி ஓடிடியிலும் பார்க்கலாம் - ரிலீஸ் தேதி இதோ
Aranmanai 4 OTT Release : சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அரண்மனை 4 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamannaah, Raashi Khanna
நகைச்சுவை படங்களை இயக்குவதில் கில்லாடி டைரக்டரான சுந்தர் சி, அரண்மனை படம் மூலம் பேய் பட ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார். அரண்மனை படத்தின் முதல் பாகம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வேறலெவல் ஹிட் அடித்தது. அதன் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2016-ம் ஆண்டு இயக்கினார் சுந்தர் சி. திரிஷா நடிப்பில் வெளியான அப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் வாரிக்குவித்தது.
aranmanai 4
இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் ரிலீஸ் ஆனது. முதல் இரண்டு பாகங்களை காட்டிலும் இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக வெற்றிவாகை சூடியது. இந்த நிலையில், அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை சைலண்டாக எடுத்து முடித்த சுந்தர் சி, அப்படத்தை கடந்த மே மாதம் 2-ந் தேதி திரைக்கு கொண்டு வந்தார். அப்படத்தை இயக்கி, தயாரித்ததோடு அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் சுந்தர் சி.
இதையும் படியுங்கள்... Mohan : எனக்கு எய்ட்ஸ் இருக்குனு சொன்னப்போ ஷாக்கிங்கா இருந்தது... மனமுடைந்து பேசிய நடிகர் மோகன்
aranmanai 4 OTT Release
அரண்மனை 4 திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரும் லீட் ரோலில் நடித்திருந்தனர். கடந்த 5 மாதங்களாக துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் படமாக அரண்மனை 4 அமைந்தது. இந்த ஆண்டு கோலிவுட்டில் ரிலீஸ் ஆன படங்களில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனை படைத்த முதல் படம் அரண்மனை 4. 25 நாட்களை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் இப்படம் அண்மையில் இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
aranmanai 4 OTT Release Date
இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அரண்மனை 4 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம், அப்படத்தை வருகிற ஜூன் 21ந் தேதி ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. தியேட்டரில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடியிலும் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... 12 வயதிலேயே இப்படி ஒரு பக்குவமா? முதல் சம்பளம் ரூ.1 கோடியை நன்கொடையாக கொடுத்த மகேஷ் பாபு மகள் சித்தாரா!