- Home
- Gallery
- டிஆர்பி-யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றிய சன் டிவி
டிஆர்பி-யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றிய சன் டிவி
சன் டிவியில் டிஆர்பி-யில் நம்பர் 1 இடத்தை பிடித்து சக்கைப்போடு போட்டு வரும் சிங்கப்பெண்ணே சீரியலின் ஒளிபரப்பு நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.

singappenne serial
சன் டிவி சீரியல்களுக்கு என தனி மவுசு உண்டு. 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி ஏராளமான ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. இதன்காரணமாக டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் தக்க வைத்து இருக்கின்றன. அதுமட்டுமின்றி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் லிஸ்டிலும் சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
Sun TV singappenne Serial
சன் டிவி சீரியல்களில் தற்போது டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் சீரியல் என்றால் அது சிங்கப்பெண்ணே சீரியல் தான். இந்த சீரியல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் மனீஷா மகேஷ், தர்ஷக் கவுடா, அமல்ஜித், விஜே பவித்ரா, யோகலட்சுமி, ஹர்ஷிதா விஜயன் என ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பியில் மளமளவென முன்னேறிய இந்த சீரியல் தான் கடந்த சில மாதங்களாக நம்பர் 1 இடத்தில் நீடித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... சவால் விட்ட சுடர்.. உதவ முன்வரும் இந்து! மனோகரியின் சதி திட்டம் முறியடிக்கப்படுமா? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
Ethirneechal Serial
சிங்கப்பெண்ணே சீரியல் நம்பர் 1 இடத்தில் நீடிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் அதன் டைம் ஸ்லாட் தான். பிரைம் டைம் எனப்படும் இரவு 8 மணிக்கு சிங்கப்பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தற்போது திடீரென சிங்கப்பெண்ணே சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றி உள்ளனர். அதன்படி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் வருகிற ஜூன் 10-ந் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
singapenne Serial Time Changed
இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளதால், அந்த நேரத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் இனி ஒளிபரப்பாக உள்ளது. சிங்கப்பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகி வந்த இரவு 8 மணிக்கு மருமகள் என்கிற புது சீரியல் வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மருமகள் சீரியலில் பிக்பாஸ் பிரபலம் கேப்ரியல்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Soori : அப்போ லைட் மேன்.. இப்போ ட்ரெண்டிங் ஆக்ஷன் ஹீரோ - விஸ்வரூப வளர்ச்சி கண்ட சூரி - நெட் ஒர்த் எவ்வளவு?