- Home
- Gallery
- சிறகடிக்க ஆசை சீரியலை அடிச்சு பறக்கவிட்ட சன் டிவியின் புது சீரியல் - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
சிறகடிக்க ஆசை சீரியலை அடிச்சு பறக்கவிட்ட சன் டிவியின் புது சீரியல் - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
சன் டிவியில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் டிஆர்பியில் சிறகடிக்க ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டி இருக்கிறது.

serial TRP
சினிமாவை போல் சின்னத்திரை சீரியல்களும் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகி வருகிறது. சினிமாவுக்கு நிகராக சீரியல்களும் விறுவிறுப்பான திரைக்கதை உடன் உள்ளதால் அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது. சீரியல்களின் முன்னணி நிலவரம் டிஆர்பி டேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 24-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவியின் புது சீரியலான மருமகள் மாஸ் காட்டி இருக்கிறது.
Tamil serial TRP
டாப் 10 டிஆர்பி பட்டியலில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி 2 ஆகிய சீரியல்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக 10வது இடத்தில் உள்ள ஆஹா கல்யாணம் சீரியலுக்கு 5.84 டிஆர்பி புள்ளிகளும், 9ம் இடத்தில் உள்ள சுந்தரி 2 சீரியலுக்கு 6.35 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சீரியல் 6.48 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... மூக்குத்தி அம்மன் 2 இல்ல... ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா அம்மனாக நடிக்கும் படத்தின் டைட்டில் லீக்கானது
Siragadikka Aasai
கடந்த வாரம் 8-ம் இடம்பிடித்த மல்லி சீரியல் இந்த வாரம் 7.21 டிஆர்பி புள்ளிகளுடன் 6-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் கடந்த வாரம் 7ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரமும் 6.79 டிஆர்பி புள்ளிகளுடன் 7ம் இடத்தில் நீடிக்கிறது. கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த வானத்தைப் போல சீரியல், இந்த வாரமும் 7.68 புள்ளிகளுடன் அதே இடத்தை தக்கவைத்து உள்ளது. இந்த வாரம் டாப் 4 சீரியல்களின் நிலவரம் தான் அதிரடியாக மாறி உள்ளது
marumagal Serial
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.89 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் நீடிக்கிறது. அதேபோல் கடந்த சில வாரங்களாக இரண்டாம் இடத்தில் நீடித்து வந்த கயல் சீரியல் 8.53 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சன் டிவியில் கடந்த வாரம் கேப்ரியல்லா நடிப்பில் புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 8.55 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்து மாஸ் காட்டி உள்ளது. சிங்கப்பெண்ணே சீரியல் 9.26 டிஆர்பி புள்ளிகளுடன் வழக்கம்போல் முதலிடத்தை தக்கவைத்து உள்ளது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா.. த்ரிஷாலாம் லிஸ்டுலையே இல்ல! இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் ரஜினி, விஜய், பட நாயகிகள்!