- Home
- Gallery
- Chaitra Reddy : கணவருடன் சேர்ந்து குட் நியூஸ் சொன்ன கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி - குவியும் வாழ்த்து
Chaitra Reddy : கணவருடன் சேர்ந்து குட் நியூஸ் சொன்ன கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி - குவியும் வாழ்த்து
சன் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் ஹீரோயின் சைத்ரா ரெட்டி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

chaitra reddy
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த சீரியல் மூலம் தான் பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால் நடிகை பிரியா பவானி சங்கர் அந்த சீரியலில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு பதில் நடிகை சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார். பெங்களூருவை சேர்ந்தவரான இவர் தமிழில் முதன் முதலில் நடித்த சீரியல் இதுவாகும்.
Kayal Serial Actress chaitra reddy
பின்னர் ஜீ தமிழுக்கு தாவிய சைத்ரா, அதில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். சின்னத்திரையில் கலக்கி வந்த சைத்ராவுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதுவும் முதல் படத்திலேயே அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் இணைந்து நடித்துவிட்டார் சைத்ரா. ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் சைத்ரா. இதையடுத்து சன் டிவியில் கயல் சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது.
இதையும் படியுங்கள்... நடிச்சது 5 படம் தான்... ஆனா 300 கோடிக்கு சொத்து இருக்கு; 23 வருஷமா நடிக்கல; மவுசும் குறையல - யார் இந்த நடிகை?
chaitra reddy New Car
கயல் சீரியலில் ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு டாப் 5-ல் தொடர்ந்து நீடித்து வருகிறது. டிஆர்பியில் விஜய் டிவிக்கு டஃப் கொடுக்கும் சீரியலாகவும் கயல் இருந்து வருகிறது. சீரியல் மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி, தற்போது சொகுசு கார் ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
chaitra reddy Bought new Benz Car
நடிகை சைத்ரா ரெட்டி, தற்போது பென்ஸ் காரை வாங்கி இருக்கிறார். புது காருக்கு பூஜை போட்ட கையோடு, தன் கணவருடன் சேர்ந்து கார் முன் நின்று ரொமாண்டிக் போட்டோஷூட்டும் நடத்தி இருக்கிறார் சைத்ரா ரெட்டி. அவர் வாங்கி இருக்கும் பென்ஸ் E கிளாஸ் காரின் விலை ரூ.70 முதல் ரூ.80 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. சினிமா நடிகர்களுக்கு நிகராக சொகுசு கார் வாங்கி உள்ள நடிகை சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Aranmanai 4 : தியேட்டரில் 100 கோடி வசூலித்த அரண்மனை 4 படத்தை இனி ஓடிடியிலும் பார்க்கலாம் - ரிலீஸ் தேதி இதோ