- Home
- Gallery
- எதிர்நீச்சல் சீரியலை இழுத்து மூடிய சன் டிவி... கடைசி நாள் ஷூட்டிங்கில் கண்ணீர்மல்க பிரபலங்கள் எடுத்த போட்டோஸ்
எதிர்நீச்சல் சீரியலை இழுத்து மூடிய சன் டிவி... கடைசி நாள் ஷூட்டிங்கில் கண்ணீர்மல்க பிரபலங்கள் எடுத்த போட்டோஸ்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் கிளைமாக்ஸ் ஷூட் நடந்து முடிந்துள்ளது.

Ethirneechal Serial
சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். கோலங்கள் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் இந்த சீரியலை இயக்கி வந்தார். குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்த சீரியல் படிப்படியாக டிஆர்பி-யிலும் முன்னேறி டாப்புக்கு வந்தது. பின்னர் போகப்போக கதைக்களம் விறுவிறுப்பானதால் சோசியல் மீடியாவில் இந்த சீரியல் பற்றி பேச்சுகள் அடிபட தொடங்கின.
ethirneechal serial ended
அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் வில்லனாக ஆதி குணசேகரன் என்கிற கேரக்டரில் நடித்த மாரிமுத்து, தன்னுடைய மிரட்டலான நடிப்பாலும் நக்கலான டயலாக் டெலிவெரியாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் அவர் பேசும் ‘இந்தாம்மா ஏய்’ என்கிற வசனம் வேறலெவலில் ஹிட்டனாது. அது மீம் டெம்பிளேட்டாகவும் மாறியதால் மாரிமுத்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியபோது கிடைக்காத பெயரும் புகழும் மாரிமுத்துக்கு இந்த ஒற்றை சீரியல் மூலம் கிடைத்தது.
இதையும் படியுங்கள்... TTF Vasan : மதுரை முன்னாள் ரவுடி... வரிசூர் செல்வத்துடன் டிடிஎஃப் வாசன் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?
ethirneechal serial actress
இப்படி நன்றாக சென்றுகொண்டிருந்த சீரியலுக்கு கடந்த ஆண்டு பேரிடியாய் வந்தது தான் மாரிமுத்துவின் மறைவுச் செய்தி. அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் காரை விட்டு இறங்கியதுமே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் மாரிமுத்து.
ethirneechal Serial Climax
மாரிமுத்துவின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி எதிர்நீச்சல் சீரியல் டீமையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதிர்நீச்சல் சீரியலில் தூணாக இருந்த மாரிமுத்து மறைந்துவிட்டதால் இனி அந்த சீரியல் என்ன ஆகுமோ என ரசிகர்கள் எண்ணி வந்த நிலையில் அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தனர். அவர் திறமையான நடிகராக இருந்தாலும் மாரிமுத்து அளவுக்கு அவரது நடிப்பு இல்லை என்பது தான் பலரது கருத்தாகவும் இருந்தது.
ethirneechal Serial Wrapped
பின்னர் போகப் போக கதையும் சொதப்பியதால் டிஆர்பி-யில் சரிவை சந்தித்த எதிர்நீச்சல் சீரியலை தற்போது வேறு வழியின்றி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்து இருக்கிறது. அப்போது கடைசி நாள் படப்பிடிப்பின் போது சீரியல் குழுவினர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் இருவருக்கும் பிறந்தநாள்! டபுள் சந்தோஷத்தில் கமல் சொன்ன வாழ்த்து